ஓர் ஆயிரம் பார்வையிலே - Or Aayiram Parvaiyile


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும்
உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த காற்றினில் நான் கலந்தேன்  
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் 
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்


Comments

  1. இனிமையான குரலில் அருமையான பாடல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal