சக்கரவர்த்தி திருமகள் ( M G R vs N S K)



பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

NSK:

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும் 
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கக்தோழா பொற்பதக்கம் 
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரார் நேரர் 
ஈரேழுத்துப்  பாடி வாரேன் பேரே அதற்கு
ஒரேழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்.


MGR:
யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்துவைக்க
ஆதிரப்படுபவர் போல அல்லவா  
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்துவைக்க
ஆதிரப்படுபவர் போல அல்லவா
உமது ஆரம்ப கவி சொல்லுதே புலவா
வீட்டுப்பூனைக்குட்டி காட்டிலோடு புலியைப் பிடித்துத் தின்ன
புறப்பட்ட கதைபோல அல்லவா தற்புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா   

NSK:
அப்புறம் ஓ ஒ  சரிதான்
பூதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் 
இதற்கு மேலான தானம்யிருந்தா சொல்லுங்கள்
ஏய் கேள்விக்கு பதிலைக் கொண்டா, டேப்பை ஒடைச்சி எறிவேன் ரெண்டா
உன்ன ஜெசிச்சுக் கட்டுவேன் முண்டா, அப்புறம் பறக்க விடுவேன் ஜெண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

MGR:
எந்தனை தானம் தந்தாலும் எந்தலோகம் புகழ்ந்தாலும் 
தானத்தில் சிறந்தது நிதானம் தான்.. நிதானம் தான்
எந்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் 
தானத்தில் சிறந்தது நிதானம் தான்
நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்,
நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்

NSK:சொல்லிட்டான், கோயிலைக்கட்டி வைப்பதெதனாலே?
இதற்கு பதில்சொல்ல முடியாதுத்தம்பி
கோவிலை கட்டி வைப்பது எதனாலே

MGR:சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே

அன்னசத்திரம் இருப்பதெதனாலே?  

NSK:அன்னசத்திரம், என்ன சொன்ன?  

MGR:அன்னசத்திரம் இருப்பதெதனாலே?

NSK: பல திண்ணை தூங்கிப் பசங்க இருப்பதாலேஎப்படி?

MGR:பரதேசியாய்த் திரிவதெதனாலே?  
பரதேசியாய் திரிவதெதனாலே?  

NSK:அவன் பத்துவீட்டு, அவன் பத்துவீட்டு சோறுருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி, காரிருள் சூழ்வது எவ்விடத்திலே?
தம்பி இங்க கவனி, காரிருள் சூழ்வது எவ்விடத்திலே?

MGR:கற்றறிவுயில்லாத மூடர் நெஞ்சகதிலே
அண்ணே,கற்றறிவுயில்லாத மூடர் நெஞ்சகதிலே

NSK:சொல்லிப்புட்டையே,

MGR: புகையும் நெருப்யில்லாமல் எரிவதெது?

NSK: புகையும் நெருப்யில்லாமல் எரிவதெது?

MGR: நான் சொல்லட்டுமா?

NSK:சொல்லு

MGR: புகையும் நெருப்யில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

NSK:சரிதான் சரிதான்

MGR:உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
NSK:கத்தி
MGR:இல்ல
NSK:கோடாலி
MGR:இல்ல
NSK:ஈட்டி
MGR:இல்ல
NSK:கடப்பரா
MGR:இல்ல
NSK:அதுவும் இல்லையா, அப்புறம் பயங்கரமான ஆயுதம், அக்கினி திராவகமா
அது ஆயுதமில்லையே 
அடே நீயே சொல்லுப்பா
MGR:உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைக்கெட்டுப்  போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது

NSK:ஆஹா

MGR:நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது

Comments

  1. Consciously they have introduced their ideas even in commercial ventures. Really great!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal