தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன் (Thunkathe thambi thunkathe)


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரம் கதைச் சொல்லும் சிறை கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரம் கதைச் சொல்லும் சிறை கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம்கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்..!
நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துகொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துகொண்டார்
உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

ஒர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
ஒர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்,
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே 
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

தம்பி தூங்காதே

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal