தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (Thottuvida Thottuvida thodarum)



பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை  
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை  
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
  
முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து - கன்னி
முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து - கன்னி
முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி கிள்ளுவதைப் பார்த்து - நெஞ்சை
தட்டி தட்டி விட்டதடி காற்று
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை  
பட்டுவிடப் பட்டுவிட மலரும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் - சொல்லைக்
கொட்டி கொட்டி வர்ணனைகள் அளக்கும்
கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் - சொல்லைக்
கொட்டி கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும் - இடை
கெஞ்சிக் கெஞ்சிக் கை இரண்டில் தவிக்கும் ம் ம்...
பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் - கதை
சொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும் - கதை
சொல்லிச் சொல்லி பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் - கன்னம்
கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும் ம் ம்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை  
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

சக்கரவர்த்தி திருமகள் ( M G R vs N S K)