இன்பமே உந்தன் பேர் பெண்மையோ (Idhayakkani)


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்




ஆண்:

இன்பமே உந்தன்பேர் பெண்மையோ
இன்பமே உந்தன்பேர் பெண்மையோ
என் இதயக்கனி, நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

பெண்:

இன்பமே உந்தன்பேர் வள்ளலோ
இன்பமே உந்தன்பேர் வள்ளலோ
உன் இதயக்கனி, நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி 
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ…,

சர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்தவா
சர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்தவா
சந்தன மேடையும் இங்கே, சாகச நாடகம் எங்கே?

ஆண்:

தேனோடு பால் தரும் செவ்வில நீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதைப்போல் எழிமேவிட நீவர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ…,

பஞ்சனை வேண்டுமோ? நெஞ்சனை போதுமே
பஞ்சனை வேண்டுமோ? நெஞ்சனை போதுமே
கைவிரல் மோதியம் காண, காலையில் பூமுகம் நான,

பெண்:

பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போர்யிடும் மேனிகள் துள்ள,
புன்னகையோடுயொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன?
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ…,

மல்லிகை தோட்டமோ, வெண்பனி கூட்டமோ,
மல்லிகை தோட்டமோ, வெண்பனி கூட்டமோ,

ஆண்:

மாமலைமேல் விளையாடும் மார்பினில் பூங்குயில் ஆகும்

பெண்:

மங்கலவாத்தியம் பொங்கிடும் ஓசையில் வேகம் மாட்டிசை பாடும்

ஆண்:

மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும்,
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ…,
என் இதயக்கனி, நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

பெண்:

இன்பமே உந்தன்பேர் வள்ளலோ…,



Comments

Post a Comment

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal