முதல் சீதனம் (Yettu Madippu Sela)

பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

எட்டு மடிப்புசேல…., இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
எட்டு மடிப்புசேல…., இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு,
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு, இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு

ஆசை உன்மேல் வச்சதற்கு அடிச்ச அடியும் வலிகளையே
நீயூம் ஒதுக்கி வெறுத்ததுதான் இந்த நெஞ்சம் பொறுக்கலேயே
எப்போதுதான்  மாறுமோ காதல் தடை மீறுமோ
எப்போதுதான்  மாறுமோ காதல் தடை மீறுமோ
அனல் வந்து அடிக்குதுதடி என் உள்ளம் கொதிக்குதடி
பூவான என் மனசும் புண்ணாகி போனதடி, புண்ணாகி போனதடி

எட்டு மடிப்புசேல…., இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு,
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு

காதல் வந்த நாள்முதலா என்னைநானே மறந்துவிட்டேன்
ஒனது விருப்பம் தெரியாம மனச நானும் பறிகொடுத்தேன்
சிந்தை கெட்டுப்போனது செத்தும் உடல் நோகுது
சிந்தை கெட்டுப்போனது செத்தும் உடல் நோகுது
ஆத்தாடி மனுசனுக்கு ஆகாது பொண்ணு வழக்கு
ஏத்தாத குத்துவிளக்கு சுட்டாக்க யார் பொறுப்பு, சுட்டாக்க யார் பொறுப்பு

எட்டு மடிப்புசேல…., இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு,
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு.

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)