மாய நதியின்று (Maya Nathiyinru) - KABALI
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
நெஞ்சமெல்லாம் வண்ணம் பலவண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நானுனை காணும் வரையில் தாபதநிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடிமுறை நான்தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாய நதியின்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
மாய நதியின்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
நீர்வழியே மீன்களைப்போல் என்னுறவை நானிழந்தேன்
நீயிருந்தும் நீயிருந்தும் ஒரு துறவை நான்
அடைந்தேன்
ஒளிபோக்கும் இருளே வாழ்வின் பொருளானேன்
வலி தீர்க்கும் வரியால் வாஞ்சைத் தரவா ஆ....
மாய நதியின்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலமிங்கே சேரும் உறவிலே
போனவழியிலே வாழ்க்கை திரும்புதே
Comments
Post a Comment