வசந்த மாளிகை (Vasantha Maligai)



மயக்கம் என்ன? இந்த மௌனம் என்ன?
மணிமாளிகை தான் கண்ணே
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணிமாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும்
காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன் ஊஞ்சல்
அதில் தேவதை போலே நீயாடா
பூ வாடை வரும் மேனியிலே - உன்
புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விருந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்து கவிபாட
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணிமாளிகை தான் கண்ணே!

அன்னத்தை தோட்ட கைகளினாலே
மது கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன்
கன்னத்தில் மிதக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விடமாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனிநான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன் - உன்
உள்ளம் இருப்பது என்னிடமே - அதை
உயிர்போனாலும் தரமாட்டேன்

மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணிமாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே!
அன்பு காணிக்கை தான் கண்ணே!

Comments